கோவை : சூழலியல் தொடர்பான செய்திகளை, செய்தித் தாள்கள் எவ்வாறு அணுகுகின்றன என்பது குறித்து பேராசிரியர் சி.ஆர்.ஜெயபிரகாஷ் ஆய்வு ஒன்றைச் செய்துள்ளார். அதில் விலங்கு - மனித மோதல்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான சம்பவங்களை ஊடகத்துறை வாசகர்களுக்கு வழங்கும் விதம் குறித்து ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.

பி.எஸ்.ஜி. கல்லூரியின், முதுகலை இதழியல் மற்றும் வெகுசனதொடர்பியல் துறையின் தலைவர் சி.ஆர்.ஜெயபிரகாஷ், கோவை ஆங்கில மற்றும் தமிழ் பத்திரிக்கைகளில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய அறிக்கை, ஊடக மற்றும் சுற்றுச்சூழலாளர்களின் கருத்துக்களின் உட்பொருள் பகுப்பாய்வு என்ற தலைப்பில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் வாய்மொழித் தேர்வு நேற்று நடைபெற்றது.

சுற்றுச்சூழல் சம்பந்தமான செய்திகளை நிருபர்கள் சேகரிப்பது, மற்றும் ஊடகங்கள் வெளியிடும் விதம் குறித்து ஆய்வு செய்ய, 2011 -ம் ஆண்டு நாளிதழ்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த உட்பொருள் பகுப்பாய்வுக்காக 5 செய்தி நிறுவனங்களின் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாத செய்திகளை மாதிரிகளாகத் தேர்ந்தெடுத்துள்ளார். அதில் இரண்டு தமிழ் மற்றும் 3 ஆங்கில நாளிதழ்கள் அடங்கும்.
"மக்களின் கருத்துகளை வடிவமைக்கச் சக்தி வாய்ந்த கருவியாக மொழி உள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்ட செய்தி நிறுவனங்களுக்கு அதிகமான செய்திகள் உள்ளூர் பத்திரிக்கையாளர்களால் வழங்கப்படுகிறது. அவர்களே, கருத்துகளை மக்களிடம் கருத்தை பரப்பி ஆழப் பதியவைக்கும் பொறுப்பில் இருந்து செயல்படுகிறார்கள்," எனக் கூறுகிறது ஆய்வு.
ஆகவே, நிருபர்களுக்கு சூழலியல் செய்திகளை எழுதுவது குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், வெளிநாடுகளில் உள்ள பி.டி.ஐ., யூ.என்.ஐ, குளோபல் ஏஜென்சி போல இந்திய நிறுவனங்களும் சூழலியல் செய்திகளை சரியான முறையில் தர ஏற்பாடு செய்ய வேண்டும் . இதனிடையே, சம்பவ இடத்தில் இருந்து வரும் சூழலியல் செய்தியும், வெளியாகும் செய்தியும் ஒரே மாதிரியாக இருக்கிறதா, என்பதை கவனத்தில் கொண்டு ஊடகத்துறை செயல்பட வேண்டும் என ஆய்வு பரிந்துரைக்கிறது.
மேலும், இந்த ஆய்வு விஞ்ஞானிகளிடம், மக்களைக் குழப்பும் வகையிலான தொழில்நுட்ப மற்றும் அறிவியல் வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக மக்களுக்கு எளிதில் புரியும் வகையிலான வார்த்தையில் தகவல்களைத் தர வேண்டும். இதனால் வாசிப்பாளர்களுக்கு உண்மையான தகவல் சேரும் சாத்தியம் அதிகம் என்கிறது.
இந்த ஆய்வின் படி, நாளிதழ்களில் வரும் சூழல் சார்ந்த செய்திகளில் இடம்பெற்றுள்ள செய்திகளிலே மனித - விலங்கு மோதல் குறித்த செய்திகள் (48.13%) முன்னணியில் உள்ளன. அதற்கடுத்ததாக, தடுப்பு முறைகள் (36 %) மற்றும் எதிர்வினைகள் (15.5 %) இடம்பெறுகின்றன என்பது தெரிய வருகிறது.
இதனடிப்படையில் சூழலியல் குறித்த செய்திகளை பார்க்கும் போது மோதல்கள் குறித்த செய்திகள் 52.4 சதவீதம் வரையிலும் வெளிவருகின்றன. இதனால், எதிர்மறையான செய்திகள் தான் அதிகளவில் வெளிவருகின்றன என்பது உறுதியாகிறது என ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார்.
சுற்றுச்சூழல் செய்திகளுக்காகப் பிரத்தியேகமாக செய்யப்பட்ட இந்த ஆய்வு, பத்திரிக்கையாளர்கள், சூழலியளார்கள், விஞ்ஞானிகள் இணைந்து சுற்றுச்சூழல் குறித்த செய்திகளை உள்ளதை உள்ளபடியே மக்களுக்கு நேர்மறையாக வழங்க வேண்டும். அதற்கு எளிமையான மொழியைக் கையாள வேண்டும் என தெரிவிக்கிறது.